Ad Code

Responsive Advertisement

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் 2வது போஸ்டர் வெளியீடு

நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் போனி கபூர் தயாரிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘துணிவு’. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையொட்டி நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனி படப்பிடிப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து துணிவு வெல்வோம் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் அஜித்துடன், சமுத்திரக்கனி முதன்முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளார். மேலும் வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

அக்டோபர் மாதம் இறுதி அல்லது நவம்பர் மாதம் முதல் வாரத்தில் படப்பிடிப்பை நிறைவுசெய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. பொங்கலை முன்னிட்டு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டு வரும்நிலையில், இன்று இந்தப் படத்தின் 2வது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/slrB8NL

Post a Comment

0 Comments