Ad Code

Responsive Advertisement

வெற்றிப்படமாக அமைந்த ‘திருச்சிற்றம்பலம்’ - கேக் வெட்டிய தனுஷ்; பங்கேற்காத நடிகைகள்

‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 18-ம் தேதி திரையரங்கில் வெளியான திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், பாரதிராஜா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, ஸ்டண்ட் சில்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

image

கடந்த 8 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ள இந்தப் படம் தற்போதும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெகுகாலங்களுக்குப் பிறகு தனுஷ் திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருவதால், இதனைக் கொண்டாடும்விதமாக கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இந்த விழாவில் பலரும் கலந்துகொண்ட நிலையில், படத்தில் நடித்த நடிகைகள் யாரும் கலந்துகொள்ளவில்லை. இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Lv9UlXE

Post a Comment

0 Comments