அசாம் மாநிலத்தை சேர்ந்த நடிகர் கிஷோர் தாஸ் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 30.
அசாமிய திரையுலகில் பிரபல நடிகராக வலம்வந்தவர் கிஷோர் தாஸ். 30 வயதான இவர் நடிப்பு, நடனம், மாடல் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி என பன்முகம் கொண்டவராக அவர் விளங்கினார். 300க்கும் மேற்பட்ட இசை வீடியோக்களில் நடித்துள்ள கிஷோரின் ‘துருத் துருத்’ என்ற இசை வீடியோ அசாமின் மிகவும் பிரபலமான வீடியோவாக மாறியது. இதுதவிர மேலும் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். கிஷோர் தாஸ் கடைசியாக 'தாதா துமி டஸ்டோ போர்' என்ற அசாமிய திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனிடையே நடிகர் கிஷோருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக கவஹாத்தியில் சிறிது காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர்தர சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தார். சென்னையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கிஷோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதனால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கிஷோரின் உயிர் பிரிந்தது. அவரின் இறப்பு செய்தி அசாமி திரையுலகில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சக நடிகர்கள், ரசிகர்கள் எனப் பல தரப்பினரும் கிஷோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே இறந்த கிஷோர் தாஸின் உடலை அசாமுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தமிழக அரசை கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அது நடக்கவில்லை என்றும் அசாம் எம்எல்ஏ ஹேமங்கா தாகுரியா தெரிவித்துள்ளார். இதன்காரணமாக கிஷோர் தாஸின் இறுதிச் சடங்குகள் சென்னையிலேயே நடத்தி முடிக்கப்பட்டது.
இதையும் படிக்கலாம்: 'தளபதி 67' படத்தில் லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணையும் பிரபல இயக்குநர்?
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/wO9NyJK
0 Comments