Ad Code

Responsive Advertisement

மில்லியன் கணக்கில் வியூஸ்களை குவித்த The Legend படத்தின் ட்ரெய்லரும், பாடல்களும்!

‘தி லெஜெண்ட்’ படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் பல மில்லியன் பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்டுள்ளது.

லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்துள்ள படம் ‘தி லெஜெண்ட்’. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என ஐந்து மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் ஊர்வசி ரதுலா, விஜயகுமார், பிரபு, நாசர், விவேக், சுமன், யோகிபாபு என பல நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருக்கிறார்கள். 

image

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியிருக்கிறார்கள். கடந்த 29ல் வெளியான படத்தின் ட்ரெய்லரை தற்போது வரை 28 மில்லியனுக்கும் மேலானோர் (2 கோடியை கடந்து) பார்த்து ரசித்துள்ளனர்.

இதுபோக, தி லெஜெண்ட் படத்தின் வாடி வாசல், மொசலொ மொசலு உள்ளிட்ட மொத்த ஆல்பமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

லெஜெண்ட் படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படைத்த சாதனையை காண: CLICK HERE

அதற்கு சான்றாக ஹாரிஸின் துள்ளலான இசையில் லெஜெண்ட் சரவணனின் அசத்தலான நடன அசைவுகளில் உருவாகியுள்ள வாடி வாசல் பாடல் 17 மில்லியன், மொசலொ மொசலு 14 மில்லியனுக்கும் மேலும் வியூஸ்களை பெற்றுள்ளது.

image

இது தொடர்பாக ட்விட்டரில் லெஜெண்ட் படக்குழு, மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ள மக்களுக்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளது.

மக்கள் என் மேல வெச்சிருக்க நம்பிக்கைதான் என்னோட பலம். அந்த நம்பிக்கை எப்போதும் வீண் போகாது என ட்ரெய்லரில் சரவணன் பேசும் வசனத்துக்கு ஏற்ப ட்ரெய்லர், பாடல்களுக்கே தி லெஜெண்ட் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளதை அறியலாம்.

மேலும் தி லெஜெண்ட் படம் எப்போது ரிலீஸாகும் என்றும் சினிமா ரசிகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

ALSO READ: 

இந்தியன் 2 வருமா வராதா? கமல் கூறியது என்ன? - அண்மைத் தகவல்கள் இதோ!

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/hjHGrX1

Post a Comment

0 Comments