Ad Code

Responsive Advertisement

யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவான ‘பன்னி குட்டி’ - ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களான யோகி பாபு, கருணாகரன் நடிப்பில் உருவாகியுள்ள ‘பன்னி குட்டி’ படத்தின் வெளியிட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு கதிர், ரேஷ்மி மேனன் நடிப்பில் உருவான ‘கிருமி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அனுசரண் முருகையன். இவர், ‘குற்றமே தண்டனை’, ‘ஆண்டவன் கட்டளை’, ‘சிகை’ ஆகியப் படங்களின் எடிட்டராகவும் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், ‘கிருமி’ படத்திற்குப் பிறகு யோகி பாபு, கருணாகரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க ‘பன்னி குட்டி’ என்ற படத்தை இயக்கி வந்தார் இயக்குநர் அனுசரண். கடந்த 2019-ம் ஆண்டே படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், 2020-ம் ஆண்டு ஜனவரியில் படத்தின் ட்ரெய்லரும் வெளியானது.

ஆனால் அதன்பின்பு கடந்த 2 வருடங்களாக இந்தப் படம் குறித்த அறிவிப்பு எதும் வெளியாகாதநிலையில், வருகிற ஜூலை 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான ராமர், தங்கதுரை மற்றும் சிங்கம் புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

image

பன்றிக்குட்டியை சுற்றி நடக்கும் கதைக்களத்தில் உருவான இந்தப் படத்திற்கு, கிருஷ்ணகுமார் என்கிற கே இசைமையத்துள்ளார். முன்னதாக, விஜய் சேதுபதியின் ‘ஆண்டவன் கட்டளை’, கதிரின் ‘கிருமி’ ஆகியப் படங்களுக்கும் இவர் தான் இசையமைத்திருந்தார். யோகி பாபு, கருணாகரன் ஆகிய நடிகர்களின் நடிப்பில், நீண்ட நாட்கள் கழித்து வெளியாகும் இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/PaOi2FA

Post a Comment

0 Comments