கமல்ஹாசன் நடிப்பில் திரையரங்குகளில் பார்வையாளர்களின் அமோக வரவேற்புடன் ஓடிக்கொண்டிக்கும் ‘விக்ரம்’ படம், 300 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘விக்ரம்’ படம் உலகம் முழுவதும் கடந்த 3-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், நரேன், செம்பன் வினோத், சூர்யா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். படம் வெளியாகி 10 நாட்களாகியும் பல திரையரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது.
இந்நிலையில், ‘விக்ரம்’ படம் தமிழ் திரையுலகில் ரஜினியின் ‘2.0’ படத்திற்குப் பிறகு அதிகம் வசூலை ஈட்டும் படமாக அமைந்துள்ளது. ரஜினியின் ‘கபாலி’, ‘தர்பார்’, விஜயின் ‘மெர்சல்’, ‘பீஸ்ட்’, அஜித்தின்‘வலிமை’ உள்ளிட்ட படங்களை எல்லாம் முந்தி வசூலில் 300 கோடி ரூபாய் சாதனை புரிந்து வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பே, சாட்டிலைட் மற்றும் ஓடிடி விற்பனை உரிமத்தில் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், படத்தின் படம் வசூல் வருகிற நாட்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/BfZzYye
0 Comments