Ad Code

Responsive Advertisement

இந்தியில் வெளியான கமலின் ‘விக்ரம்’ ட்ரெயிலர் - பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் ரியாக்ஷன்

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் மிகவும் தெறிக்கவிட்டு இருப்பதாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பாராட்டியுள்ளார்.

கடந்த 2018-ம் ஆண்டு வெளியான‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்திற்குப் பிறகு, அரசியல் மற்றும் ரியாலிட்டி ஷோவில் முழு கவனம் செலுத்தி வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் நெகட்டிங் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், சிறப்புத் தோற்றத்தில் சூர்யாவும் நடித்துள்ளனர். மேலும் ஃபகத் ஃபாசில், நரேன், ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத் ஜோஸ், ஷான்வி ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் தயாரித்துள்ள நிலையில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியிடுகிறது. அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே வெளியான ‘பத்தல பத்தல’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகியுள்ளது. இதற்கிடையில், நேரு விளையாட்டு அரங்கில் நடந்த பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில், தமிழில் ட்ரெயிலர் வெளியிடப்பட்டது. கமல்ஹாசனின் குரலில் துவங்கிய ட்ரெயிலர் ஆக்ஷ்ன் த்ரில்லராக இருந்தன.

மேலும், தற்போது பிரான்சில் நடைபெற்று வரும் 75-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘விக்ரம்’ ட்ரெயிலர் மெட்டவெர்ஸ் முறையில் வெளியாவதை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் அங்கு சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று இந்தி மொழியில் ‘விக்ரம்’ ட்ரெயிலர் வெளியானது. இந்த ட்ரெயிலர் காட்சிகளால் மிகவும் ஈர்க்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், படக்குழுவுக்கு தலைவணங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜை திறமையான நண்பர் என்றும், இந்திய சினிமாவின் லெஜண்ட் கமல்ஹாசன் என்று பாராட்டியுள்ள ரன்வீர் சிங், ட்ரெயிலர் பயராக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ட்ரெயிலரையும் தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/XsEV9NA

Post a Comment

0 Comments