Ad Code

Responsive Advertisement

தனுஷுக்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்? - எந்தப் படத்தில் தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் அவருக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா அருள் மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ் நடிப்பில், ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் வருகிற ஜூலை 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. கொரோனா காரணமாக ‘கர்ணன்’, ‘மாறன்’, ‘ஜகமே தந்திரம்’, ‘அட்ராங்கி ரே’ ஆகிய 4 படங்களும் ஓடிடியில் வெளியானநிலையில், சுமார் 3 ஆண்டுகளுக்குப்பிறகு ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

image

இந்தப் படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதி ராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளநிலையில், ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா ஜிகே மேற்கொண்டுள்ளார்.

மேலும், நெட்ஃபிளிக்சின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடிகர் தனுஷின் ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ திரைப்படம் ஜூலை 15-ம் தேதி குறிப்பிட்ட திரையரங்குகளிலும், ஜூலை 22-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் நேரடியாகவும் வெளியிடப்படுகிறது. அத்துடன், செல்வராகவனின் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளிலும், தமிழ் மற்றும் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி வரும் தனுஷின் ‘வாத்தி’ படப்பிடிப்பிலும் உள்ளது.

image

இந்தப் படங்களை தொடர்ந்து சத்யஜோதி தயாரிப்பில் உருவாகும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடிக்கவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தை ‘ராக்கி’, ‘சாணிக் காயிதம்’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இந்நிலையில், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா அருள் மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டார்க் காமெடி ஜானரில், 1930-களில் அதிரடி, சாகசங்கள் நிறைந்த காட்சிகளுடன் மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/D4EvOGh

Post a Comment

0 Comments