Ad Code

Responsive Advertisement

ஓடிடி-யில் எப்போ வருகிறது `பீஸ்ட்’? ரசிகர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் கொடுத்த வாவ் அப்டேட்!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று ‘பீஸ்ட்’. இயக்குநர் நெல்சனின் முந்தைய படமான ‘டாக்டரும்’, விஜய்யின் முந்தைய படமான ‘மாஸ்டரும்’ நல்ல வரவேற்பு பெற்றன என்பதால், இவர்கள் காம்போவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மாஸ் வைரல் ஆன அரபிக்குத்து பாட்டு, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு, விஜய்யின் தொலைக்காட்சி பேட்டி என வரிசையாக ஹைப்தான். இப்படி பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த ஏப்ரல் 13-ம் தேதி வெளிவந்த பீஸ்ட் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

தொடர்புடைய செய்தி: ‘பீஸ்ட்’ திரை விமர்சனம் 

image

படம் வெளியானதை தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோக்கள், பாடல் மேக்கிங் வீடியோக்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து இப்படத்தின், `ஜாலியோ ஜிம்கானா’ பாடலை நேற்று முன்தினம் வெளியிட்டு ரசிகர்களை ‘பீஸ்ட்’ மோடுக்கு கொண்டுசென்றது தயாரிப்பு நிறுவனம்.

அதைத்தொடர்ந்து தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியையும் அறிவித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இதுதொடர்பாக வெளியாகியிருக்கும் அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, படம் வரும் 11-ம் தேதி முதல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் படத்தை காணலாம்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/wzFyYIh

Post a Comment

0 Comments