Ad Code

Responsive Advertisement

”இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள்: இந்தி நல்ல மொழி: நாம் கற்றுக்கொள்ளவேண்டும்” - சுஹாசினி

"இந்தி நல்ல மொழி என்பதால், நாம் அதனைக் கற்று கொள்ள வேண்டும்" என்று திரைப்பட நடிகை சுஹாசினி தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல தங்கை நகை கடையில் அட்சய திருதியை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சியில் நடிகை சுஹாசினி பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் தற்கால சூழலில் தங்கம் சிறந்த முதலீடு. மலையாள மொழி படங்களை இன்று இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பார்க்கிறார்கள். துல்கர் சல்மான், பகத் பாசில் போன்ற மலையாள மொழி நடிகர்களை இந்திய மக்கள் பலரும் அறிந்திருக்கிறார்கள். தென்னிந்திய படங்களுக்கு மிக பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் உள்ளது. தமிழ், மலையாள படங்கள் தரத்தில் சிறந்தவையாக உள்ளன. தெலுங்கு படங்கள் பிரம்மாண்டமாக இருக்கிறது. கன்னட படங்கள் நாம் யோசிக்க முடியாத அளவு முன்னேறி சென்று கொண்டிருக்கிறது” என்றவரிடம், தென்னிந்திய வட இந்திய சினிமா இடையே நடைபெறும் மொழி சண்டை குறித்து கேட்டபோது,

image

”நடிகர்களுக்கு அனைத்து மொழிகளும் தெரிந்தே ஆக வேண்டும். அனைத்து மொழிகளையும் மதித்தே ஆக வேண்டும். எல்லோரும் அனைத்து மொழிகளையும் சமமாக கருத வேண்டும். இந்தி நல்ல மொழி. அதனைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்தி பேசுபவர்கள் நல்லவர்கள். அவர்களுடன் நாம் பேச வேண்டும் என்றால் அந்த மொழியை கற்று கொள்ள வேண்டும். தமிழர்களும் நல்லவர்கள். அவர்களுடன் தமிழில் பேசினால் மகிழ்ச்சி அடைவார்கள்” என்று பேசினார் சுஹாசினி.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/xu2aiQo

Post a Comment

0 Comments