Ad Code

Responsive Advertisement

தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’: ரிலீஸ் தேதியை தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தனுஷ் நடிப்பில் கடைசியாக ‘மாறன்’ வெளியானது. இதனைத்தொடர்ந்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘திருச்சிற்றம்பலம்’, ‘வாத்தி’, ‘தி க்ரே மேன்’ நடித்து வருபவர், ராம்குமாரின் ‘வால் நட்சத்திரம்’, மாரி செல்வராஜ் மற்றும் அருண் மாதேஸ்வரன் படங்களிலும் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதில், ‘திருச்சிற்றம்பலம்’ படத்தினை அடுத்ததாக திரைக்கு வெளிக்கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில், தனுஷுடன் ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஹீரோயின்களாக நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார்.

image

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின், படப்பிடிப்பு கடந்த வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஊடகம் ஒன்றிற்கு உதயநிதி அளித்தப் பேட்டியில், ”’திருச்சிற்றம்பலம்’வரும் ஜூலை 1 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதனால், தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/PpixHhS

Post a Comment

0 Comments