Ad Code

Responsive Advertisement

‘எஸ்கே 21’ படத்தின் டைட்டில், கதாபாத்திரம் குறித்த அப்டேட்- ரஜினி பட பெயரை வைத்த படக்குழு?

சிவகார்த்திகேயனின் ‘எஸ்.கே. 21’ படத்தின் தலைப்பு மற்றும் கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்திருந்தப் படம் ‘டான்’. கடந்த 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அனூதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் புதியப் படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். ‘எஸ்.கே. 20’ என தற்காலிகமாக பெயரிபடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பள்ளி ஆசிரியராக சிவகார்த்திகேயன் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிப்பில், ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஒப்பந்தமானார். ‘எஸ்.கே.21’ என பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட அறிவிப்பும் வெளியானது.

image

இந்நிலையில், ‘எஸ்.கே.21’படத்தின் தலைப்பு மற்றும் கதாபாத்திரம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 1986-ம் ஆண்டு வெளியான ‘மாவீரன்’ படத்தின் டைட்டில், ‘எஸ்.கே.21’படத்திற்கு சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜமௌலியின் இயக்கத்தில், ராம்சரண், காஜல் அகர்வால் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படத்தின் பெயரும் ‘மாவீரன்’ தான்.

மேலும்‘எஸ்.கே.21’படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்த மாவீரன் என்ற டைட்டிலை படக்குழு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. ஆக்ஷன் டிராமாவாக உருவாக உள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் துவங்கலாம் என்றும், இந்தியாவின் பலப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/B0tlyL2

Post a Comment

0 Comments