Ad Code

Responsive Advertisement

'முத்துநகர் படுகொலை' - புலனாய்வு படமாக எடுக்கப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அரங்கேறிய துப்பாக்கிச் சூட்டை 'முத்துநகர் படுகொலை' என்ற பெயரில் புலனாய்வு திரைப்படமாக உருவாக்கியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அதில் 12 பேர் உயிரிழந்தனர். அந்த சம்பவத்தை மையமாக வைத்து ஒரு புலனாய்வு திரைப்படத்தை எம்.எஸ். ராஜ் என்பவர் இயக்கியிருக்கிறார்.

image

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு 'மெரினா புரட்சி' என்ற திரைப்படத்தை இயக்கி கொரியா உள்ளிட்ட பல திரைப்பட விழாக்களில் விருது வென்றவர்  எம்.எஸ்.ராஜ். இவர் தற்போது தூத்துக்குடி சம்பவத்தை முழுமையாக ஆய்வு செய்து இந்த புலனாய்வு திரைப்படத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை பாதிக்கப்பட்டவர்களை குடும்பங்களுக்கு திரையிட்டு காண்பித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தை பார்த்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வேண்டி கையொப்பம் எழுதி கொடுத்துள்ளனர். இதேபோல் இந்த புலனாய்வு திரைப்படத்தை 32 நாடுகளில் திரையிட்டு, பார்வையாளர்களிடமிருந்து கையெழுத்து திரட்டி தமிழக அரசிடம் வழங்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/evo7X8t

Post a Comment

0 Comments