தனது இசையை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க கோரி 3 நிறுவனங்கள் மீதான இளைராஜா தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கில் அந்த நிறுவனங்கள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இளையராஜா இசையமைத்து, 1978 -80களில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு, 3 கன்னட, 2 மலையாளம் என மொத்தம் 30 படங்களின் இசை பணிகளை இன்ரிகோ ரெக்கார்டிங், அகி மியூசிக், யுனிசிஸ் ஆகிய மூன்று இசை நிறுவனங்கள் பயன்படுத்த தனி நீதிபதி கொண்ட அமர்வு முன்னதாக அனுமதி அளித்திருந்தது. அந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து `தயாரிப்பாளர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இன்ரிகோ நிறுவனத்திற்கு சாதகமான உத்தரவை பிறப்பிக்க முடியாது. பட தயாரிப்பாளர்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளது. இசை பணிகளுக்கு அவர்கள் முதல் உரிமையாளர்கள் அல்ல’ என்று இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தங்கள் செய்கைக்கு பதிலளிக்குமாறு நான்கு வாரங்களில் பதிலளிக்க இன்ரிகோ ரெக்கார்டிங், அகி மியூசிக், யுனிசிஸ் இன்போ ஆகியவை பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளனர் நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி.
சமீபத்திய செய்தி: மதுரை சித்திரை திருவிழா திருக்கல்யாண உற்சவம்: 4 முதல் 7ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/SmnhWYG
0 Comments