தமிழ் புத்தாண்டுக்கு வெளியான பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் திரைப்படங்கள் இணைந்து முதல் வார முடிவில் சுமார் 120 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக திரைத்துறையினர் கூறுகின்றனர்.
தமிழகத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம், மிகப்பெரிய வரவேற்புக்கு மத்தியில் ஏப்ரல் 13-ம் தேதி வெளியானது. நெல்சன் இயக்கிய இந்தப் படத்திற்கு எதிர்மறை விமர்சனங்களே அதிகம் கிடைத்தன. இருந்தாலும் முதல் நாள் தமிழகத்தில் 36 கோடியே 88 லட்சம் வசூல் செய்தது சாதனை படைத்தது. இதனால் முதல் வார முடிவில் வசூல் சாதனை படைக்கும் என்று கருதப்பட்டது. அதன்படி வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் அரங்கம் நிறைந்த காட்சிகள் திரையிடப்பட்டன. அதேபோல் வார இறுதி நாட்களிலும் அதிக பார்வையாளர்கள் வந்தனர். இதன்காரணமாக 800க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான பீஸ்ட் முதல் வார முடிவில் தமிழகத்தில் மட்டும் சுமார் 90 கோடி வரை வசூல் செய்துள்ளது என திரைத்துறையினர் கூறுகின்றனர்.
இந்தப் படத்திற்கு எதிர் விமர்சனங்கள் இருந்தாலும் வசூலில் பிரச்னை இல்லை என்று தெரிவிக்கின்றனர். இந்த நிலை வரும்நாட்களிலும் தொடர்ந்தால் இரண்டாவது வார முடிவில் 120 கோடியை தொடும் என்று கணிக்கின்றனர்.
பீஸ்ட் திரைப்படத்துடன் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களும் எதிர்பார்திருந்த கே.ஜி.எஃப்-2 வியாழக்கிழமை வெளியானது. இது வேறு மொழிப்படமாக இருந்தாலும் தமிழகத்திலும் எக்கசக்க எதிர்பார்ப்பு இருந்தது. அதனால் விஜயின் படம் வெளியான போதும் சுமார் 350 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. அத்துடன் நள்ளிரவு 1 மணி முதல் இடைவிடாமல் காட்சிகள் திரையிடப்பட்டன. இதன் காரணமாக முதல் சுமார் கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.
இதையடுத்து இரண்டாவது நாளில் இருந்து அதன் வசூல் இன்னும் அதிகரித்ததாக திரையங்கு உரிமையாளர்கள் கூறுகின்றனர். மேலும் திரையரங்குகளில் எண்ணிக்கையும் சற்று அதிகரிக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான கே.ஜி.எஃப்-2 படம் தமிழகத்தில் சுமார் 30 கோடி வரை வசூல் செய்துள்ளது என திரை வியாபாரத்தில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு கன்னடப்படம் தமிழகத்தில் வெளியாகி இந்த அளவுக்கு வரவேற்பு பெறுவது இதுவே முதல் முறை. பல தமிழ் படங்களுக்கே இது போன்ற வரவேற்பு கிடைப்பதில்லை. அப்படிப்பட்ட சூழலில் விஜயின் பீஸ்ட் படத்துடன் களமிறங்கி வசூலை குவித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 கோடி ரூபாய் வரை கே.ஜி.எஃப்-2 வசூல் செய்யும் எனவும் கணக்கிட்டுள்ளனர்.
தமிழில் இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியான ரஜினியின் ’பேட்ட’ மற்றும் அஜித்தின் ’விஸ்வாசம்’ படங்கள் இணைந்து 105 கோடி ரூபாய் ஷேர் தொகை வழங்கியது. அந்த எண்ணிக்கையை தற்போது வெளியாகியுள்ள பீஸ்ட் மற்றும் கே.ஜி.எஃப்-2 படங்கள் தொடும் என்று விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/sdKheGT
0 Comments