Ad Code

Responsive Advertisement

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ பட இயக்குனருக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு: ஏன் தெரியுமா?

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்பட இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இனி அவர் செல்லும் இடமெல்லாம் மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்பு வழங்குவார்கள். இதனை இந்தியா டுடே செய்தி நிறுவனம் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிவித்துள்ளது. 

image

1990-களில் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்கள் குறித்த உண்மை சம்பவத்தை தழுவிய கதையம்சம் கொண்ட திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இந்த திரைப்படம் கடந்த 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாக்ஸ் ஆஃபிஸில் தரமான வசூலை ஈட்டி வருகிறது. 

இந்த படம் வெளியான நிலையில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரிக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ‘Y’ பிரிவு பாதுகாப்பின் கீழ் வரும் அவருக்கு 8 காவல் அதிகாரிகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு கமாண்டோ படையினரும் அடங்குவர் என சொல்லப்பட்டுள்ளது. 

பிரதமர் மோடி உட்பட பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். அதே நேரத்தில் காங்கிரஸ் இந்த படத்தை கடுமையாக விமர்சித்து வருகிறது. சில மாநிலங்களில் இந்த படத்திற்கு 100 சதவிகித வரி விலக்கும் வழங்கப்பட்டுள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/rs5au4x

Post a Comment

0 Comments