Ad Code

Responsive Advertisement

“அவன் கத்தி வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாச்சு” - வெளியானது KGF-2 டூஃபான் பாடல்

கேஜிஎஃப் அத்தியாயம் 2 படத்தின் முதல் பாடல் “டூஃபான்” வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

2018 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் “கேஜிஎஃப்”. கோலார் தங்க வயல் தொடர்பான கதைக்களத்துடன் ‘யாஷ்’ நடிப்பில் வெளியானது. திரையிடப்பட்ட பல மொழிகளில் பெரு வெற்றி பெற்றது. வசனம் மற்றும் இசைக்காகவே தமிழிலும் இந்தப் படம் கொண்டாடப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் 2வது பாகத்திற்கான பணியில் தீவிரம் காட்டினர். கொரோனா காரணமாக தொடர்ந்து தள்ளிப் போடப்பட்ட நிலையில், ஏப்ரல் 14 அன்று 2ஆம் பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படத்தின் முதல் பாடலான “டூஃபான்” வெளியானது.

டூஃபான் என்பதற்கு புயல் என்று பொருள். “நீங்க சொன்ன மாதிரி எங்களுக்கு தைரியம் இருந்ததில்லை. தைரியம் இருந்ததில்லை. சக்தியும் இருந்ததில்லை. சாவு எங்க தலைமேல் குதியாட்டம் போட்டுச்சு. அதுக்கு குறுக்க நின்னுட்டு இருந்தவன் தலைய ஒருத்தன் சீவுனான். அன்னைக்குதான் நாங்க சாவுமேல குதியாட்டம் போட்டோம்” என்று பின்னணியில் ஒலிக்கும் அந்தக் குரல் “அவன் கத்தி வீசுன வேகத்துல ஒரு புயலே உருவாச்சு. நீங்க உயிரோட இருக்கணும்னா அவன் குறுக்க போயிடாதீங்க” என்கிற அழுத்தமான வசனத்துடன் பாடல் துவங்குகிறது. கேஜிஎஃப்க்கே உண்டான துள்ளலான இசையை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். பாடல் வெளியான சில மணி நேரங்களில் வைரலாகத் துவங்கியது. 1 மில்லியன் பார்வைகளுக்கு மேல் 2 மொழிகளில் பெற்று ட்ரெண்டிங்கில் நுழைந்துள்ளது. மேலும், படத்தின் ட்ரெய்லர் மார்ச் 27 அன்று மாலை 6.40க்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/Z2eqRL7

Post a Comment

0 Comments