Ad Code

Responsive Advertisement

“தி காஷ்மீர் பைல்ஸ்” படத்தைப் பார்க்க போலீசாருக்கு விடுமுறை:எந்த மாநிலத்தில் தெரியுமா?

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தைப் பார்க்க மத்தியப் பிரதேச காவல்துறைக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான "தி காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்தைப் பார்க்க, மாநில காவல்துறையினருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மத்தியப் பிரதேச அரசு இன்று அறிவித்துள்ளது. இதுகுறித்து அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா செய்தியாளர்களிடம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்க்க மத்திய பிரதேச போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கான அறிவுறுத்தல் காவல்துறை தலைமை இயக்குநர் சுதிர் சக்சேனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

"மாநிலத்தில் உள்ள எந்த ஒரு போலீஸ்காரரும் தங்கள் குடும்பத்துடன் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பார்க்கச் செல்ல விரும்பும் போதெல்லாம் விடுமுறை அளிக்குமாறு நான் டிஜிபியிடம் கூறியுள்ளேன்" என்று மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறினார். மத்தியப் பிரதேசத்தில் கேளிக்கை வரியிலிருந்து ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ படத்துக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விலக்கு அளித்துள்ளார். படம் அதிகபட்சமாக மக்கள் பார்க்கத் தகுதியானதால், அதை வரி விலக்கு செய்ய அரசாங்கம் முடிவு செய்ததாக அவர் கூறினார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/8kOpE7R

Post a Comment

0 Comments