Ad Code

Responsive Advertisement

அக்ஷரா ஹாசனின் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படத்தின் ஓடிடி தேதி வெளியீடு

கமல்ஹாசனின் இளையமகளான அக்ஷராஹாசனின் ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ திரைப்படம், வரும் வெள்ளிக்கிழமை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்து வரும் கமல்ஹாசனின், இரண்டாவது மகள் அக்ஷாராஹாசன். இவர், தமிழில் நடிகர் அஜித்தின் ‘விவேகம்’ படத்திலும், நடிகர் விக்ரமின் ‘கடாரம் கொண்டான்’ படத்திலும் நடித்துள்ளார். இவர், தற்போது ராஜா ராமமூர்த்தி இயக்கத்தில், ‘அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு’ படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில், மால்குடி சுபா, உஷா உதூப், அஞ்சனா ஜெயப்பிரகாஷ்இ ஜார்ஜ் மரியான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

image

இந்நிலையில், இந்தப் படம் அமேசான் ப்ரைமில் வருகிற வெள்ளிக்கிழமை 25-ம் தேதி வெளியாகவுள்ளது. 19 வயது பெண்ணாக, பவித்ரா என்ற கதாபாத்திரத்தில், கட்டுப்பாடான குடும்பத்தில் வளரும் பெண் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. முன்னதாக இந்தப் படம், கனடா, போஸ்டன், சியாட்டில் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/dCc4HMi

Post a Comment

0 Comments