Ad Code

Responsive Advertisement

"காளி கையில் சூலத்தோடு துப்பாக்கி" - மிரட்டும் ‘இரவின் நிழல்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

நடிகர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக கடந்த 2019 ஆம் ஆண்டு 'ஒத்த செருப்பு சைஸ் 7' வெளியாகி விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’ தேசிய விருது, ரசூல் பூக்குட்டிக்கும் சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

இப்படத்தினைத் தொடர்ந்து தற்போது ‘இரவின் நிழல்’ படத்தை இயக்கி வருகிறார் பார்த்திபன். இந்தப்படம், ஆசியாவிலேயே முதன்முதலாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில், தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார்.

image

இதுகுறித்து, பார்த்திபன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “First look…Design design-ஆக செய்து பார்த்தும், ஒரே poster-ல் எப்படி எல்லாம் விளக்குவது? அகில இந்திய நட்சத்திரங்கள் இருந்தும், ஒரு போர்வாளை மட்டுமே போட்டு அகிலத்தையே மிரட்ட நானென்ன மணிரத்தினம் சாரா? அவர் 1st look-ஐ வெளியிடுவதே special-நன்றி! ஹாலிவுட் படங்களில் பணிப்புரிந்தும், ஆஸ்கார் 2 பெற்றும், இன்னும் 30 வருடங்களுக்கான இசை உச்சம் நிலைக்க உழைக்கும் இறை+நிறை கலைஞன் A R R அவர்களின் கருத்து இப்படத்தைப் பற்றி போதுமான அளவு சொல்லுமென நம்புகிறேன்” என்றுக் கூறி படம் குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் பேசும் வீடியோவையும் இணைத்துள்ளார்.

காளி கையில் சூலங்களோடு துப்பாக்கியும் வைத்திருக்க அவருக்கு கீழே பயத்துடன் பார்த்திபன் அமர்ந்திருக்கிறார். அதேபோல, புதரான இடத்தில் பார்த்திபன் டார்ச் லைட் அடித்துக்கொண்டிருக்கும் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளது படக்குழு.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/0ZHJzml

Post a Comment

0 Comments