Ad Code

Responsive Advertisement

‘பீஸ்ட்’ படத்தின் அடுத்த அப்டேட் - விஜய் ரசிகர்களால் திக்குமுக்காடிப்போன வெப்சைட்

‘பீஸ்ட்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழுடன் படத்தின் வெளியீட்டு தேதியும் வெளியான நிலையில், ஒரே நேரத்தில் ரசிகர்கள் அதிகம்பேர் தேடியதால், சென்சார் வெப்சைட் திக்குமுக்காடிப்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் யூ-டியூப்பில் சாதனை படைத்துள்ளன. விரைவில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

image

இந்நிலையில், ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மேலும், 2 மணி நேரம், 35 நிமிடங்கள் படத்தின் ரன்னிங் நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, சென்சார் சான்றிதழ் வெளியான நேரத்தில், அதிகளவிலான ரசிகர்கள் ஒரே நேரத்தில் சென்சார் போர்டு இணையதளத்தில் தேடியதால், சிறிதுநேரம் அந்த இணையதளம் டவுன் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/NqTdKrL

Post a Comment

0 Comments