அமேசான் மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் தளங்கள் இந்திய தயாரிப்பு நிறுவனமான க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சுமார் 4 பில்லியன் ரூபாய் மதிப்பில் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை தயாரித்து வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 18 மாதங்களில் 8 திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை இந்த இரண்டு ஓ.டி.டி தளங்களிலும் ஸ்ட்ரீம் செய்ய உள்ளதாக க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கர்னேஷ் ஷர்மா தெரிவித்துள்ளார்.
இவர் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் சகோதரர். இந்த நிறுவனத்தில் அனுஷ்காவும் இணை நிறுவனராக உள்ளார். இதனை நெட்ஃப்ளிக்ஸ் தளமும் உறுதி செய்துள்ளது.
கொரோனா தொற்று பரவலால் ஏற்பட்ட நெருக்கடியில் இருந்து மீண்டுவர இந்த ஒப்பந்தம் படத்தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிதும் உதவும் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இதன் மூலம் உலகத்தின் மிகப்பெரிய எண்டர்டெயின்மெண்ட் மார்க்கெட்டாக உள்ள இந்தியாவில் தங்களது சந்தை வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள முடியும் என இந்த இரண்டு நிறுவனங்களும் கணக்கு போட்டுள்ளதாக தெரிகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3qXfAQx
0 Comments