தமிழகத்தில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் வலிமை திரைப்படத்தை வெளியிடுவதில் தயாரிப்பாளர் உறுதியாக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஒமைக்ரான் பரவல் காரணமாக தமிழகத்தின் திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசு கட்டுப்பாடு விதித்தது. இதை தொடர்ந்து தற்போது இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இதனால் இந்திய அளவில் வெளியாக இருந்த ஆர்.ஆர்.ஆர், ராதே ஷ்யாம் போன்ற தெலுங்கு திரைப்படங்களில் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டன. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு தமிழில் வெளியாகும் வலிமை திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் நேற்றும் உறுதி செய்தார்.
தொடர்புடைய செய்தி: ” ‘வலிமை’ அனுபவத்தை ஜனவரி 13-லிருந்து பெறுங்கள்”- ரிலீஸ் தேதியை உறுதிசெய்த போனி கபூர்
இருந்தாலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் அந்த படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்பட்டால் வலிமை திரைப்படத்தை வெளியிடலாம் அல்லது வேறு ஏதேனும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முடிவை மாற்றிக் கொள்ளலாம் என தயாரிப்பாளர் திட்டமிட்டு இருக்கிறார் என கூறப்படுகிறது. எனவே தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மட்டும் அமல்படுத்தப்பட்டால் வலிமை வெளியாவதில் எந்த சிக்கலும் இருக்காது என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3G0lEgg
0 Comments