நடிகர் சிலம்பரசனுக்கு ‘கவுரவ டாக்டர்’ வழங்குவதாக அறிவித்துள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம்.
நடிகர் சிலம்பரசன் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ வெற்றியைத்தொடர்ந்து ‘பத்துதல’, ‘வெந்து தணிந்தது காடு’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘வெந்து தணிந்தது காடு’, ‘கொரோனா குமார்’ இரண்டுப் படங்களையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்து வருகிறார். அவருடைய வேல்ஸ் பல்கலைக்கழகம்தான் தற்போது நடிகர் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டத்தினை வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் நடிகர் சிலம்பரசனை தேர்ந்தெடுத்து கவுரவிக்கவுள்ளது. ஏற்கனவே, எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட நடிகர்களுக்கு ’கவுரவ டாக்டர்’ பட்டத்தினை இந்நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிலம்பரசனுக்கு வரும் 11 ஆம் தேதி ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கவுள்ள நிலையில், ஐசரி கணேஷ் பேசும்போது, ”மரியாதைக்குரிய நடிகர் சிலம்பரசனுக்கு ’கவுரவ டாக்டர்’ பட்டதைக் கொடுப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் பல்கலைக்கழகத்தில் இந்த விருதுக்கு தகுதியான நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கென்று ஒரு குழு இருக்கிறது. அவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதனை செய்யும் பிரபலங்களை கவனமாக ஆய்வு செய்து இறுதிப் பட்டியலை முடிவு செய்வார்கள்.
அந்தவகையில் ஆறு மாத குழந்தையாக இருக்கும் போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன். விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருத்தரோட வயதும், அவரோட கேரியரும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன். நடிப்பு,இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த ’கவுரவ டாக்டர்’ என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி" என்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3G8srVf
0 Comments