கன்னட திரைத்துறையின் மூத்த நடிகர் சிவராம் இன்று உயிரிழந்தார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கன்னட சினிமாவின் மூத்த நடிகர் ’சிவராமண்ணா’ என்று அழைக்கப்படும் சிவராம் இன்று உயிரிழந்தார். நேற்று வீட்டில் பூஜை செய்துகொண்டிருக்கும்போது திடீரென மயக்கமடைந்து விழுந்துள்ளார். தலையில் அடிப்பட்டவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டுப்போய் சேர்த்துள்ளனர். பரிசோதித்ததில் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதை கண்டறிந்த மருத்துவர்கள், அவரது வயதை காரணம் காட்டி அறுவை சிகிச்சை செய்ய மறுத்துள்ளனர். தொடர்ந்து கோமா நிலையில் இருந்தவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
83 வயதாகும் சிவராம் துணை நடிகர், நகைச்சுவை நடிகர் என இதுவரை 100 க்கும் மேற்பட்டப் படங்களில் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த ‘தர்மதுரை’ படத்தையும் சிவராம் தயாரித்துள்ளார். இப்படம் 175 நாட்களுக்குமேல் ஓடி சூப்பர் ஹிட் அடித்தது. மேலும், ரஜினி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் ஆகிய மூவரும் நடித்த ஒரே படமான ’Geraftaar’ படத்தையும் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2ZWjqio
0 Comments