நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் டீசர் வரும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகி பாராட்டுகளைக் குவித்து வருகிறது. அடுத்ததாக, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- பிரியங்கா மோகன் நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியாகவிருக்கிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். வில்லனாக வினய் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார்.
இந்த நிலையில், எதற்கும் துணிந்தவன் வரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில், படத்தின் டீசர் வரும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3onjYaw
0 Comments