Ad Code

Responsive Advertisement

’முத்துவின் பயணம்’: நாளை வெளியாகும் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு கிளிம்ப்ஸ்’

கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகும் 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கிளிம்ப்ஸ் நாளை வெளியாகிறது.

'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களுக்குப் பிறகு சிம்பு - கெளதம் மேனன் கூட்டணி 'வெந்து தணிந்தது காடு' படத்தில் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். சிம்புவின் 47-வது படமான இத்திரைப்படம், எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி வருகிறது.

image

இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தாமரை பாடல்கள் எழுதுகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. இப்படத்திற்காக உடல் எடை மெலிந்து கவனம் ஈர்க்கிறார் சிம்பு. ஆக்‌ஷன் - கிராமத்து பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது.இந்த நிலையில், நாளை மதியம் வெந்து தணிந்தது காடு படத்தின் கிளிம்ப்ஸ் முத்துவின் பயணம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார் சிம்பு. இப்படத்தில், முத்து என்ற கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/33eM4wt

Post a Comment

0 Comments