
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.
பாகுபலி திரைப்படத்தை தொடர்ந்து எஸ்.எஸ். ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இரத்தம், ரணம், ரௌத்திரம் என்ற பொருளுடன் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய்தேவ்கன், ஸ்ரேயா, ஆலியா பட், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்து இருக்கின்றனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை வரும் ஜனவரி 7ஆம் தேதி வெளியிடுகின்றனர். இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை புனைவு கதையுடன் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை ராஜமௌலி இயக்கியுள்ளார். அதற்கான காட்சிகள் ட்ரெய்லரில் பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அந்த ட்ரெய்லரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3GpYkIM



0 Comments