Ad Code

Responsive Advertisement

2021 ட்விட்டர் இந்தியாவின் டாப் 10 பட்டியல்: விஜய்யின் ‘மாஸ்டர்’... ‘பீஸ்ட்’ சாதனை

2021 ஆம் ஆண்டு ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்குகளில் விஜய்யின் மாஸ்டர் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

அரசியல்வாதிகள், சினிமாத்துறையினர் என உலகின் அத்தனை பெரும்பாலான பிரபலங்களுக்கும் அவர்களது ரசிகர்களுக்கும் ட்விட்டர் உறவுப்பாலமாக இருக்கிறது. குறிப்பாக, சினிமா துறையினர் தங்கள் புதுப்பட அறிவிப்புகள், வெளியீட்டுத் தேதிகள் உள்ளிட்ட அனைத்தையும் ட்விட்டர் மூலமே அதிகம் வெளியிடுகின்றனர்.

image

அதன் அடிப்படையில், ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது ஹேஷ்டேக்கில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அதனையொட்டி ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக், அதிகம் ட்வீட் செய்யப்பட்ட நடிகர் பெயர் என ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் ட்விட்டர் இந்தியா நிறுவனம் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

image

இன்று ட்விட்டர் வெளியிட்டப் பட்டியலில் இந்தியாவில் அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்கில் நடிகர் விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் இடம்பிடித்துள்ளது. கொரோனா ஹேஷ்டேக் முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பத்து ஹேஷ்டேக்கிலும் இடம்பிடித்த ஒரே சினிமா பெயர் ‘மாஸ்டர்’ தான். மேலும், சினிமாவில் விஜய்யின் ’பீஸ்ட்’ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிக லைக்குகள் மற்றும் அதிக ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்டர் என்றும் அறிவித்துள்ளது.

image

அதேபோல், அதிகம் ட்வீட் செய்யப்பட்ட பாலிவுட் நடிகர்கள் பட்டியலில் கொரோனா காலத்தில் பேருதவிகளை செய்த நடிகர் சோனு சூட் முதலிடத்திலும் நடிகைகளில் ஆலியா பட் முதலிடத்திலும் உள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3DECTll

Post a Comment

0 Comments