
நடிகர் விஜய்யின் பெற்றோரை சந்தித்து உரையாடியுள்ளார் நடிகர் விஷால்.
விஷால் நடிப்பில் கடைசியாக கடந்த தீபாவளியையொட்டி ‘எனிமி’ வெளியானது. அடுத்ததாக வரும் ஜனவரி 26 ஆம் தேதி ‘வீரமே வாகை சூடும்’ படம் வெளியாகிறது. நேற்றுதான் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அடுத்ததாக, ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்குகிறார் விஷால். மேலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘விஷால் 33’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், பெங்களூரில் குடும்ப விழாவொன்றில் நடிகர் விஷால், நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ சந்திரசேகர், தாய் ஷோபாவை சந்தித்து உரையாடியுள்ளார். வித்தியாசமான தலைப்பாகையுடன் விஷாலும், எஸ்.ஏ சந்திரசேகரும் ஷோபாவுடன் உற்சாகமுடன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/32u9hKK



0 Comments