Ad Code

Responsive Advertisement

"வீடு கட்ட வைத்திருந்த பணத்தை புனித் ராஜ்குமார் உதவிய மாணவர்களுக்கு கொடுக்கிறேன்"- விஷால்

”நான் வீடு கட்ட வைத்திருந்த பணத்தை புனித் ராஜ்குமார் படிக்க வைத்த மாணவர்களின் கல்விச் செலவுக்கு கொடுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.

நாளை நடிகர் விஷால்-ஆர்யா நடிப்பில் ‘எனிமி’ வெளியாகிறது. இதனையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் விஷால் நேற்று திருப்பதி வந்தார். திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற விஷால் திருமலையில் இரவு தங்கி இருந்து இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு ரங்கநாதர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால் ”

 image

”நான்கு ஆண்டுகளாக  ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்திருந்தேன். தற்போது மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தது மனதில் உள்ள சுமை இறங்கியது போல் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்டிகைக் காலங்களில் திரைப்படங்கள் வெளியிட முடியாமல் இருந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி எனது ’எனிமி’ திரைப்படம் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது.

image

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழப்பு குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் இல்லை என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அவர் எத்தனையோ பல நல்ல பணிகளை முன்னெடுத்து செய்துள்ளார் . அவர் செய்ததில் ஒன்றை நான் தொடர முடிவு செய்தேன். எனவே, புனித் ராஜ்குமார்  மூலம் படித்து வந்த பிள்ளைகளின் கல்வி செலவை நான் ஏற்பதாக தெரிவித்துள்ளேன். வீடு கட்டுவதற்காக பணம் வைத்திருந்தேன் இருப்பினும் தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு நான் வீடு கட்டிக் கொள்வேன். முதலில் குழந்தைகளின் படிப்பு முக்கியம். நடிகர் புனித் ராஜ்குமார் செய்த  சேவையில் ஒன்றை நான் தொடர விரும்புகிறேன் அதனை செய்த பின்னர் மேலும் நான் பேசுகிறேன்” என்று கூறினார்.

image

மேலும்,  நடிகையும் நகரி தொகுதி எம்எல்ஏவான ரோஜாவும் ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருடன் விஷால் திருப்பதியில் இருக்கும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mEtp4o

Post a Comment

0 Comments