
சூர்யாவை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குநர் வசந்த் ‘ஜெய் பீம்’ படம் பார்த்துவிட்டு சூர்யாவை பாராட்டி இருக்கிறார்.
“அன்புள்ள சூர்யாவுக்கு முதல் வரிசை நடிகர்கள் நடிக்கும்போதுதான் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிய திரைப்படங்கள் கவனம் பெறுகின்றது. நல்ல படம் எடுக்கவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால், எத்தனை பேர் எடுக்கிறார்கள்? நட்சத்திர நடிகர் கோடிகளில் வியாபாரம், சமூக வலைதளத்திலும் சமூகத்திலும் லட்சக்கணக்கான பின் தொடரும் ரசிகர்கள். இத்தனைப் பேரையும் எப்போதும் திருப்திபடுத்தவேண்டியக் கட்டாயம்.

இவை அனைத்தையும் தாண்டி “நான் நல்ல படத்தில் நடிப்பேன்.. நல்ல படத்தில்தான் நடிப்பேன்.. நல்ல படம்தான் எடுப்பேன்” என்ற உங்கள் பிடிவாதத்திற்கு கிடைத்திருக்கும் வெற்றி இது. ‘ஜெய் பீம்’ உங்கள் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்” என்று நெகிழ்ச்சியுடன் படம் பார்த்துவிட்டுப் பாராட்டியிருக்கிறார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3wDctyp



0 Comments