
தனுஷின் மூன்றாவது பாலிவுட் படமான ’அட்ராங்கி ரே’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
நடிகர் தனுஷ், இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் முதன் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானார். அதற்கடுத்ததாக, அமிதாப் பச்சன், அக்ஷரா ஹாசன் நடிப்பில் பால்கி இயக்கத்தில் வெளியான ‘ஷமிதாப்’ படத்தில் வாய்பேசாத கலைஞனாக அசத்தினார் தனுஷ்.
Wish you could watch Dhanush play Vishu sooner. Ngl, man's gonna steal your heart in this atrangi love story.
— Disney+ Hotstar (@DisneyPlusHS) November 23, 2021
Stay tuned for the trailer of #AtrangiRe tomorrow on #DisneyPlusHotstarMultiplex pic.twitter.com/veRrnnnURm
தற்போது, மீண்டும் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ’அட்ராங்கி ரே’ படத்தில் அக்ஷய் குமார், சாரா அலிகானுடன் தனுஷ் நடித்துள்ளார். இப்படத்தின், படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாராய் இருக்கும் நிலையில், ‘அட்ராங்கி ரே’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. நாளை ட்ரைலர் வெளியாகிறது என்றும் அறிவித்திருக்கிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3oPzKtL



0 Comments