Ad Code

Responsive Advertisement

மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்பராஜ்?

ரஜினியின் அடுத்தப்படத்தை இயக்குநர் ‘கார்த்திக் சுப்பராஜ்’ இயக்குகிறார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.

ரஜினி நடிப்பில் தீபாவளியையொட்டி ‘அண்ணாத்த’ வெளியானது. அடுத்தப்படம் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த நிலையில், ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார்.

image

இப்படமும், பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. தற்போது, விக்ரமின் ‘மகான்’ படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி முடித்துள்ளார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஓடிடியில் வெளியாகிறது என்று சொல்லப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜின் அடுத்தப்பட அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில், ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி கார்த்திக் சுப்பராஜுடன் இணையும் படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3cFERXP

Post a Comment

0 Comments