Ad Code

Responsive Advertisement

”’டான்’ படத்திற்காக அடாது மழையிலும் விடாது டப்பிங் பேசினேன்” - நடிகர் சிவகார்த்திகேயன்

’அடாது மழையிலும் விடாது டப்பிங் பேசினேன்’ என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்துக் கொண்டிருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸ் டாப் 10 படங்களிலும் ட்ரெண்டிங்கில் உலகளவில் உள்ளது. அடுத்ததாக அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் ’டான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரிக்கிறார்.‘டாக்டர்’ படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார்.

image

இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், ‘டான்’ படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் மழையிலும் டப்பிங் பேசி பணிகளை முடித்துள்ளார். இதனை உற்சாகமுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் “அடாது மழையில் விடாது டப்பிங் பேசி ‘டான்’ படத்தின் டப்பிங்கை முடித்தேன். நிறைய உணர்வுப்பூர்வமாகப் பேசினேன். டப்பிங் பேசும்போது எனது கல்லூரி நாட்களை மீண்டும் பார்த்தேன். நிறைய ரசித்தேன்” என்று உற்சாகமுடன் புகைப்படத்துன் தெரிவித்துள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/304iPej

Post a Comment

0 Comments