Ad Code

Responsive Advertisement

“புரொமோ பார்த்து யோசிச்சவங்களை ஓடவிட்டுட்டீங்க நெல்சன்”- இயக்குநர்கள் பாராட்டும் ‘டாக்டர்’

“10 செகெண்ட் புரோமோ பார்த்து 1 செகெண்ட் யோசிச்சவங்களை அடிச்சி ஓட விட்டிருக்கீங்க நெல்சன்” என்று இயக்குநர்கள் டாக்டர் படத்தைப் பார்த்துவிட்டு  பாராட்டி வருகிறார்கள்.

சிவகார்த்திகேயன் - நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால், வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியடையும் என திரைத்துறையினர் கூறுகின்றனர். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், யோகி பாபு,தீபா உள்ளிட்ட பலரும் காமெடியான நடிப்பில் கவனம் ஈர்த்து பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொண்டாடுவதோடு திரை பிரபலங்களும் ‘டாக்டர்‘ படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டி வருகிறார்கள்.

image

இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “டாக்டர் படத்தை குடும்பத்துடன் பார்த்து ரசித்தேன். என்ன ஒரு ஜாலியான பயணம். சிவகார்த்திகேயன் சார் செம்ம. குழும்பத்தோடு பார்க்கவேண்டிய பொழுதுபோக்குப் படம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் “டாக்டர் பார்த்தேன். சிவகார்த்திகேயனுக்கும் நெல்சன் திலீப்குமாருக்கும் வாழ்த்துகள். இந்த அற்புதமான அனுபவத்தைக் கொடுத்த மொத்தப் படக்குழுவிற்கும் பாராட்டுகள்” என்று கூறியுள்ளார்.

image

'மேயாத மான்’ பட இயக்குநரும் ‘மாஸ்டர்’ படத்தின் திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவருமான இயக்குநர் ரத்னகுமார் “பத்து செகெண்ட் புரோமோ பார்த்து ஒரு செகெண்ட் யோசிச்சவங்கள லாம் அறக்கல அடிச்சி ஓட விட்டுருக்கீங்க. மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பாராட்டியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lumkCZ

Post a Comment

0 Comments