Ad Code

Responsive Advertisement

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ”பீஸ்ட் அப்டேட் கொடுங்க நெல்சன்” : பீஸ்ட் படத்தின் நிலைமை என்ன?

விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட் கேட்டு ‘பீஸ்ட் அப்டேட் கொடுங்க நெல்சன்’ என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் 'பீஸ்ட்' படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைகிறார். இந்தப் படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விஜய் ரசிகர்கள் ‘பீஸ்ட்’ அப்டேட் கேட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். நேற்று இன்ஸ்டா லைவ்வில் பேசிய படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ”‘பீஸ்ட்’ அப்டேட் ஸ்லோவாக வரும்” என்று தெரிவித்திருக்கிறார்.

இதில், கடுப்பான விஜய் ரசிகர்கள் அனிருத் பேசிய வீடியோவை பகிர்ந்தும் ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், அனிருத் சொன்ன தகவல் உண்மைதான் என்கிறார்கள் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள். ‘பீஸ்ட்’ படத்தை தயாரிக்கும் நிறுவனம்தான் ரஜினியின் ‘அண்ணாத்த’, சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’படங்களை தயாரிக்கிறது. தீபாவளிக்கு ‘அண்ணாத்த’ ரிலீஸ் ஆகிறது. ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. இதனால், ‘அண்ணாத்த’ படம் வெளியானதும் ‘எதற்கும் துணிந்தவன்’ டிசம்பர் அல்லது பொங்கல் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. ‘பீஸ்ட்’ நவம்பர் இறுதியில்தான் படப்பிடிப்பையே முடிக்கிறார்கள். ‘அண்ணாத்த’, ‘எதற்கும் துணிந்தவன்’ வெளியானபிறகு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் ’பீஸ்ட்’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இன்னும் ‘அண்ணாத்த’ படத்தின் முதல் பாடலையே வெளியிடவில்லை.

image

இதனால், ‘பீஸ்ட்’ அப்டேட் கிடைப்பது தாமதம்தான் என்கிறார்கள் சினிமாத்துறையினர். மேலும், விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிக்கும் ‘விஜய் 66’ படத்தின் பூஜை வரும் அக்டோபர் 15 நடக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அக்டோபர் 13 ஆம் தேதி பூஜா ஹெக்டே பிறந்தநாள். அக்டோபர் 16 அனிருத் பிறந்தநாள். இந்த தினங்களில் ’பீஸ்ட்’ அப்டேட் கிடைக்குமா என்று காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2Yf33fX

Post a Comment

0 Comments