Ad Code

Responsive Advertisement

தமிழ்-தெலுங்கு மொழியில் உருவாகும் படத்தில் விஜய்க்கு ஜோடி ஆகிறார் கீர்த்தி சுரேஷ்

‘விஜய் 66’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் இணைகிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஆறாம் கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் ’விஜய் 66’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

image

இதுவரை நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பதாக மட்டுமே நடிப்பதை உறுதி செய்துள்ளனர். இன்னும் நாயகி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே, கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ‘பைரவா’, ‘சர்கார்’ படங்களில் நடித்திருக்கிறார். தற்போது, மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ‘சர்காருவாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lBXiSB

Post a Comment

0 Comments