Ad Code

Responsive Advertisement

இயக்குநர் சச்சிக்கு சமர்பிக்கிறேன் - 'அய்யப்பனும் கோஷியும்' புகழ் நஞ்சியம்மா உருக்கம்

அய்யப்பனும் கோஷியும் படத்தில் பாடிய நஞ்சியம்மா தனக்கு வழங்கப்பட்ட விருதை படத்தின் இயக்குநர் சச்சிக்கு சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார்.

அய்யப்பனும் கோஷியும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'களக்காத்த சந்தனமேரம்' பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. கேரளாவைக்கடந்து நாடு முழுவதும் வரவேற்பு பெற்ற இந்த பாடலை பாடியவர் பழங்குடியின மூதாட்டி நாஞ்சியம்மாவுக்கு பலரும் தங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.அண்மையில் நடந்த கேரள மாநில விருது வழங்கும் விழாவில் நஞ்சியம்மாவுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. இந்த விருதை மறைந்த அய்யபனும் கோஷியும் பட இயக்குநர் சச்சி எனும் சச்சிதானந்தனுக்கு சமர்பிப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

Nanjiyamma sings for Vijeesh Mani's new film Mmmmm - Cinemaexpress English | DailyHunt

இந்த விருது தொடர்பாக பேசிய 61வயதான நாஞ்சியம்மா, ''இயக்குநர் சச்சி இல்லையென்றால் என்னால் அந்த படத்தில் பாட்டு பாடியிருக்க முடியாது. அதனால் இந்த விருதை அவருக்கு சமர்பிக்கிறேன்'' என்று தெரிவித்தார். பாட்டு பாடியது மட்டுமல்லாமல் அந்த பாட்டை எழுதியவரும் நாஞ்சியம்மாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ncB09g

Post a Comment

0 Comments