Ad Code

Responsive Advertisement

அக்டோபர் 13-ல் தொடங்கும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு

கமல்ஹாசனின் ’விக்ரம்’படத்தின் மூன்றாம் கட்டப்படப்பிடிப்பு வரும் அக்டோபர் 13 ஆம் தேதி தொடங்குகிறது.

’மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.  இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு கடந்த வாரம் நிறைவடைந்தது. இதுவரை 25 சதவீத காட்சிகளை படமாக்கியுள்ளது ’விக்ரம்’ படக்குழு.

image

இந்த நிலையில், இப்படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு வரும் அக்டோபர் 13 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதில், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி, கமல்ஹாசன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3mtyueF

Post a Comment

0 Comments