Ad Code

Responsive Advertisement

நடிகர் மாதவனின் ‘தி ராக்கெட்ரி நம்பி எஃபெக்ட்’: வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ’ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது படக்குழு.

கிரையோஜனிக் ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கடந்த 1994 ஆம் ஆண்டு கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர் நம்பி நாராயணன் இவ்வழக்கில் நிரபராதி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்போது நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனக் கூறி இருந்தது.கேரளாவில் சட்டத்துக்குப் புறம்பாக கைது செய்யப்பட்டு சித்ரவதைக்கு உள்ளானதாக திருவனந்தபுரம் சார்பு நீதிமன்றத்தில் நம்பி நாராயணன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் சமரசம் செய்து கொள்ள ஒரு கோடியே 30 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கேரள முன்னாள் முதன்மைச் செயலாளர் ஜெயக்குமார் அரசுக்கு சிபாரிசு செய்தார். இதனை ஏற்ற கேரள அமைச்சரவை, அந்தப் பணத்தை தர ஒப்புதல் அளித்து பணத்தையும் வழங்கியது. இதனால், நம்பி நாரயணன் மீதான மதிப்பு மக்களிடத்தில் உயர்ந்தது.

image

இந்த நிலையில், விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்கையை திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நடிகர் மாதவன் “இந்த உலகத்தில் எவ்வளவோ கதைகள் இருக்கு. அதில், பல கதைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். பல கதைகள் உங்க காதுக்கே வராம போயிருக்கலாம். ஆனால், சில கதைகள் பத்தி நீங்க தெரிஞ்சுக்காம இருப்பது நாட்டு மேல அக்கறை இல்லாம இருக்குறதுக்கு சமம். நம்பி நாராயணன் சாரின் கதையை நீங்க கேட்டீங்கன்னா, இவருடைய சாதனையை நீங்க பார்த்தீங்கன்னா, உங்களால பேசாம இருக்க முடியாது. ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் ’ பத்தி தெரிஞ்சுக்காம இருக்குறவங்க தெரிஞ்சுக்குவாங்க. தெரியும்னு நினைக்குறவங்க கேட்டு மிரண்டு விடுவாங்க.” என்று பேசியிருந்தார். இப்படத்தின், டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், படம் அடுத்த ஆண்டு 2022 ஏப்ரல் 1 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது என்று தற்போது படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3ugzhTz

Post a Comment

0 Comments