
காக்கா முட்டை திரைப்பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் மேலும் ஒரு புதிய திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த 'காக்கா முட்டை' திரைப்படத்தை இயக்கிய மணிகண்டன், விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை திரைப்படத்தையும் இயக்கினார். அதன் பிறகு மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த "கடைசி விவசாயி" என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் ஆகியோர் கூட்டணி அமைக்க உள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. திரைப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3nvzxgh



0 Comments