Ad Code

Responsive Advertisement

’கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீலின் ‘சலார்’: காட்சிகளை நிறைவு செய்த ஸ்ருதிஹாசன்

’கேஜிஎஃப்’ இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் தனது காட்சிகளை நிறைவு செய்துள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

’ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகர் பிரபாஸ் ’கேஜிஎஃப்’இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. பின்பு, கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது, படப்பிடிப்பு நடத்த அரசு அனுமதி அளித்துள்ளதால் ‘சலார்’ படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மீண்டும் சமீபத்தில் தொடங்கியது. பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இருவரின் காட்சிகள்தான் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டு வந்தன.

image

இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் தனது காட்சிகளை நிறைவு செய்து ஹைதராபாத்திலிருந்து வீடு திரும்பியுள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். படப்பிடிப்பு முடிந்த சந்தோஷத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாக்லெட்டுகளுடன் ஹைதராபாத் ஷெடியூல் முடிந்ததை தெரிவித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். வரும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் ’சலார்’ படம் தெலுங்கு மொழி மட்டுமல்லாமல், தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3AvT17A

Post a Comment

0 Comments