Ad Code

Responsive Advertisement

நேரடியாக ஓடிடியில் வெளியானது நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’

நயன்தாரா நடித்துள்ள ’நெற்றிக்கண்’ நேரடியாக ஓடிடியில் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான ‘அவள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் மிலிந்த் ராவ், நயன்தாராவை வைத்து ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள இப்படத்தில் பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ள நயன்தாரா, பார்வை குறைபாடு இருந்தாலும் தனது அறிவாற்றலால் கொடூரமான சைக்கோ கில்லரை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே கதைக்களம்.

கடந்த வாரம் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், இன்று மதியம் 12.15 மணிக்கு ‘நெற்றிக்கண்’ நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. படலரும் படத்தைப் பார்க்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3skLuWn

Post a Comment

0 Comments