Ad Code

Responsive Advertisement

”ஆள் செம்மயா இருக்கீங்க.. இனிமே ஹீரோதான்”: சூரியை பாராட்டிய சிவகார்த்திகேயன்

”ஆள் செம்மயா இருக்கீங்க. இனிமே ஹீரோதான்” என்று நடிகர் சூரியை வீடியோவை பகிர்ந்து பாராட்டியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கும் நடிகர் சூரி வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்திருக்கிறார். நேற்று தனது 44 வது பிறந்தநாளைக் கொண்டாடிய சூரி எப்போதும் உடல் ஃபிட்னஸில் கவனம் செலுத்துபவர். தமிழ் காமெடி நடிகர்களில் முதன்முறையாக சிக்ஸ் பேக் வைத்தவர் என்ற பெருமையையும் கொண்டிருக்கிறார்.

இதையும் படிக்கலாமே: இன்ஸ்டாவில் இணைந்த 10 மாதங்களிலேயே 3 மில்லியன் ஃபாலோயர்ஸ்கள்: சிம்பு சாதனை

இந்த நிலையில், தனது பிறந்தநாளையொட்டி சூரி நேற்றும் செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் தனது புதிய புகைப்படங்களையும் வீடியோவையும் வெளியிட்டிருந்தார்.

image

அந்த வீடியோவைப் பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “ஆள் செம்மயா இருக்கீங்க. இனிமே ஃபுல்லா ஹீரோதான். நாங்க சங்கத்துக்கு வேற செயலாளர்தான் பார்க்கணும் போல” என்று சூரியை பாராட்டி ‘அன்பு அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று தெரிவித்திருந்தார்.

image

அதனை, ரீட்விட் செய்த சூரியும் ”அப்படியெல்லாம் விட்ற முடியாதுங்க தலைவரே. சர்கஸ்னா சிங்கம் இருக்கணும். சங்கம்னா செயலாளர் இருக்கணும்” என்று உற்சாகமுடன் கூறியுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3sTqJ4k

Post a Comment

0 Comments