Ad Code

Responsive Advertisement

”ஆயிரத்தில் ஒருவன் பட பட்ஜெட்டில் பொய் சொன்னோம்” - செல்வராகவன்

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.18 கோடிதான் என இயக்குநர் செல்வராகவன் தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகம் 2010 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்குவேன் என்று அடிக்கடி இயக்குநர் செல்வராகவன் கூறிவந்தார். இதைத்தொடர்ந்து 2021 புத்தாண்டின்போது தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024இல் வெளியாகும் என்று, அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார் செல்வராகவன்.

image

இந்நிலையில் ஆயிரத்தில் ஒருவன் முதல் பாகம் குறித்து செல்வராகவன் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஆயிரத்தில் ஒருவன் படத்தின் உண்மையான பட்ஜெட் ரூ.18 கோடிதான். ஆனால் இது ஒரு மெகா பட்ஜெட் படம் என்று மக்களிடம் காட்டுவதற்காக ரூ.32 கோடி பட்ஜெட் என அறிவித்தோம். என்ன ஒரு முட்டாள்தனம்.. படம் உண்மையான பட்ஜெட்டை வசூலித்தாலும் அது சராசரி படமாகக் கருதப்பட்டது. எதுவாக இருந்தாலும் பொய் சொல்லக் கூடாது என கற்றுக்கொண்டேன்" என பதிவிட்டுள்ளார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/37UmDzh

Post a Comment

0 Comments