
”நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களை செய்து வருகிறார்” என்று கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமார் பாராட்டியிருக்கிறார்.
’அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலிசோடா’ ’10 எண்றதுக்குள்ள’, ‘கடுகு’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய விஜய் மில்டன் தற்போது கன்னட முன்னணி நடிகர் சிவராஜ்குமாரை வைத்து ‘பைராகி’ படத்தை இயக்கி வருகிறார். அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். ஆக்ஷன் - கமர்ஷியல் படமாக உருவாகிவரும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிக்கும் அனுபவம் குறித்து, நடிகர் சிவராஜ்குமார் பேசும்போதுதான் தனுஷை பாராட்டியிருக்கிறார்.
”நான் தமிழ் சினிமாவின் ரசிகன். தொடர்ந்து தமிழ் திரையுலகை கவனித்து வருவதோடு, தமிழில் வெளியாகும் அனைத்து படங்களையுமே, உடனடியாக பார்த்து விடுவேன். நடிகர் கமல் சாரின் தீவிர ரசிகன். அவரது படங்களையும் முதல் நாளில் பார்த்து விடுவேன். தற்போது நடிகர் தனுஷ் மிகச்சிறப்பான படங்களை செய்து வருகிறார். தமிழ் தொழில் நுட்ப கலைஞர்களுடன் பணிபுரிவது எனக்கு எப்போதும் மிகவும் பிடித்த விசயம். இயக்குநர் விஜய் மில்டனை பல காலமாக எனக்கு தெரியும். இப்படத்தின் கதையை அவர் கூறிய போது, படத்தில் அளவான எமோஷனில் அட்டகாசான ஆக்சன் கலந்து ஒரு அற்புதமான கதை இருந்தது தெரிந்தது.
எல்லா தரப்பு மக்களுக்கும் பிடிக்கும் கமர்ஷியல் படமாக இது இருக்கும். விஜய் மில்டன் கேமராமேனாக இருந்து கஷ்டப்பட்டு உயர்ந்த நிலைக்கு வந்துள்ளதால், சினிமா குறித்த தேர்ந்த அறிவு அவரிடம் கொட்டிக்கிடக்கிறது. எதையும் எளிமையாக செய்துவிடும் திறமை அவரிடம் இருக்கிறது. மக்கள் 35 வருடமாக என்னை கொண்டாடி வருகிறார்கள். அவர்களின் அன்புக்கு உண்மையாக உழைக்க வேண்டுமென நினைக்கிறேன். அவர்கள் ரசிக்கும்படி படங்கள் தர கடினமாக உழைப்பேன். இந்தப்படமும் அவர்கள் கொண்டாடும் படைப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே, சிவராஜ்குமாரின் ‘வஜ்ரகயா’ படத்தில் ‘நோ பிராப்ளம்’ பாடலை தனுஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களிடமும் இப்பாடல் சூப்பர் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3jsUAfC



0 Comments