
தனது மகள் அல்லு அர்ஹா அறிமுகமாகும் படப்பிடிப்புத் தளத்திற்கு சர்பிரைஸாக குடும்பத்துடன் சென்று மகளை ஊக்கப்படுத்தியுள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.
நடிகை சமந்தா தெலுங்கில் ‘சகுந்தலம்’ படத்தில் நடித்து வருகிறார். ‘ருத்ரமாதேவி’ படத்தை இயக்கிய தெலுங்கின் பிரபல இயக்குநர் குணசேகர் மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில்தான், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஹா தற்போது 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில், தனது மனைவி சினேகா ரெட்டி மற்றும் அல்லு அயானுடன் ‘சகுந்தலம்’ படப்பிடிப்பு தளத்திற்குச் சென்று மகள் அல்லு அர்ஹா நடிக்கும் காட்சிகளை தந்தையாக ரசித்து மகிழ்ந்து மகளை ஊக்கப்படுத்தியிருக்கிறார் அல்லு அர்ஜுன்.

அவர், மகளின் படப்பிடிப்பு தளத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/2X4xh4q



0 Comments