Ad Code

Responsive Advertisement

ஒலிம்பிக்: ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ் வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்திய நடிகர் மம்முட்டி

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கத்துடன் திரும்பியுள்ள இந்திய ஹாக்கி அணியைச் சேர்ந்த ஸ்ரீஜேஷுக்கு நடிகர் மம்முட்டி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 1980 ஆம் ஆண்டுப் பின், இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்களம் வென்று சாதித்தது. வெண்கலப் பதக்கத்துடன் நாடு திரும்பிய ஹாக்கி அணிக்கு தொடர்ந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், கோல் கீப்பராக செயல்பட்டு, எதிரணியின் கோல்களை சிறப்பாக தடுத்து நிறுத்திய கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜேஷூக்கு கேரள அரசு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

image

விளையாட்டுத் துறை இணை இயக்குநராக பதவி வகித்து வந்த ஸ்ரீஜேஷூக்கு துணை இயக்குநராகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாடு திரும்பிய ஸ்ரீஜேஷுக்கு கொச்சின் விமான நிலையத்திலும் சொந்த ஊரிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

image

அதோடு, மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டாரான நடிகர் மம்முட்டி ஸ்ரீஜேஷை அவரது வீட்டிற்கே பூங்கொத்துகளுடன் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஸ்ரீஜேஷும் வெண்கலப் பதக்கத்தை மம்முட்டியிடம் உற்சாகமாக காட்டி உரையாடினார்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3yK0VtB

Post a Comment

0 Comments