
துல்கர் சல்மானின் ‘குருப்’ திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்குப் பிறகு ’குருப்’, ‘ஹே சினாமிகா’, ‘சல்யூட்’ உள்ளிட்டப் படங்கள் விரைவில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவிருக்கின்றன. அடுத்ததாக, பாலிவுட் இயக்குநர் பால்கியின் த்ரில்லர் படம், செளபின் சாகிரின் புதிய படம் என நடிக்கவிருக்கிறார் துல்கர்.
இந்த நிலையில், கேரளாவையே கொள்ளை சம்பவங்களால் அதிரவைத்த சுகுமாரா குருப்பின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட துல்கர் சல்மானின் ‘குருப்’ ஓடிடியில் வெளியாகவிருக்கிறது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில், சுகுமாரா குருப்பாக துல்கர் நடித்துள்ளார் என்பதால் படத்திற்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. துல்கர் சல்மானே நடித்து தயாரித்துள்ள இப்படத்தில், ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, டொவினோ தாமஸ், ஷிவஜித், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். ’குருப்’ பிரபல ஓடிடி தளத்தில் வெளியாவதற்கான பேச்சுவார்த்தை முடிந்ததாகவும் விரைவில் அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாளம் மட்டுமல்லாமல் ‘குருப்’ தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News https://ift.tt/3lBKFap



0 Comments